புதுடெல்லி: இந்தியாவில் உள்ள பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏழு ஆண்டுகளில் இரட்டிப்பானதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மத்திய தொழிலாளர்நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதுகுறித்து கூறுகையில், “இந்தியாவின் தொழிலாளர் பலம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாற்றம் அடைந்துள்ளது.
“பெண்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தடைகளை உடைத்து, அதிகப் பொறுப்புகளை ஏற்று முன்னிலை வகிக்கின்றனர்.
“இந்தியாவின் ஒட்டுமொத்த ஊழியரணியில் பெண்களின் பங்கு கடந்த ஏழு ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக அண்மையத் தரவுகள் தெரிவிக்கின்றன.
“சில துறைகளில் ஆண்களைவிட பெண்கள் அதிக நேரம் பணியாற்றுகின்றனர். இந்த மாற்றம் இந்தியாவின் தொழிலாளர் ஆற்றலில் ஏற்பட்டுள்ள மௌனப் புரட்சி ஆகும்.
“ஸ்டாண்ட்-அப் இந்தியா, ஸ்கில் இந்தியா போன்ற கொள்கைகள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்கள் உந்து சக்தியாகத் திகழ்கிறார்கள்,” என்றார் அவர்.


