தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீர்த்தேக்கத்தில் 4.2 மில்லியன் லிட்டர் நீரை வெளியேற்றச் சொன்ன அதிகாரிக்கு அபராதம்

1 mins read
e0735ccc-5456-422c-9ad8-a8df4de03f14
படம்: கூகல் மேப்ஸ் -

இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் அதிகாரி ஒருவர் நீர்த்தேக்கத்தில் தவறவிட்ட கைப்பேசியை மீட்க கிட்டத்தட்ட 4.2 மில்லியன் லிட்டர் நீரை நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றினார்.

அதனால் அவர் தற்காலிக பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

நீர்த்தேக்கத்தில் இருந்து நீரை வெளியேற்ற வாய்மொழியாக ஒப்புதல் அளித்த உயர் அதிகாரிக்கு தற்போது 53,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபதாரம் விதிக்கப்பட்ட அதிகாரி சிறிதளவு நீரைத்தான் வெளியேற்றச் சொன்னதாகக் கூறினார்.

சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பரல்காட் நீர்த்தேக்கத்தில் நடந்தது.

கைப்பேசியை நீர்த்தேகத்தில் இருந்து மீட்கத் தொடர்ந்து நான்கு நாள்களாக கிட்டத்தட்ட 4.2 மில்லியன் நீர் அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

கோடைகாலமான இந்த நேரத்தில் இவ்வளவு நீரை வீணடித்த அதிகாரிகள் மீது பொதுமக்களும் கோபமடைந்தனர்.

ராஜே‌ஷ் விஸ்வாஸ் என்ற அதிகாரி கிட்டத்த 1,640 வெள்ளி மதிப்புள்ள சாம்சுங் கைப்பேசியை மே 21ஆம் தேதி தமது நண்பர்களுடன் படம் எடுக்கும் போது நீர்த்தேக்கத்தில் தவறவிட்டுள்ளார்.

கைப்பேசியை எடுக்க முக்குளிப்பாளர்கள் சிலர் பயன்படுத்தப்பட்டனர். இருப்பினும் கைப்பேசியை எடுக்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து அதிகாரி நீர்த்தேக்கத்தில் இருந்த நீரை வெளியேற்றியுள்ளார். வெளியேற்றப்பட்ட நீரால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

இருப்பினும் அதை அவ்வட்டார விவசாயிகள் மறுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்