திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், வசவன்குப்பம் கடற்கரையில் வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஆமை முட்டைகளைச் சேகரித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஆமைகள், இனப்பெருக்க காலத்தில் கடற்கரையில் அடைகாத்தலுக்காக முட்டைகளை இட்டுச் செல்கின்றன.
இவற்றை வனத்துறை அதிகாரிகள் சேமிப்பது வழக்கம்.
இவ்வாண்டும் ஆமைகளின் இனப்பெருக்க காலம் தொடங்கியுள்ளது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வசவன்குப்பம் கடற்கரையில் ஆமை முட்டைகளைச் சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று தினத்தந்தி தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின்கீழ், கடந்த ஆண்டு 2 லட்சம் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.