இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் கலவரம்; ஒருவர் மரணம்

1 mins read
0970520b-fc64-4412-a75c-c3b7d650361f
படம்: EPA-EFE -

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ராமநவமி பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு கலவரம் வெடித்தது.

கலவரம் ஏற்பட்ட நாளந்தா மாவட்டம் உட்பட சில வட்டாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இணையச்சேவைகளையும் அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 8 மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பீகார்‌‌ஷரிப் பகுதியில் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்கு முன்னர் வீடுகள் கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன.

கலவரம் தொடர்பாக இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அதிகாரிகள் தீவிர சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பீகாரின் மற்ற மாவட்டங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேகப் பேர்வழிகளை தொடர்ந்து கைது செய்துவருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்