சினிமா பாணியில் சிறையிலிருந்து தப்பிய மாற்றுத் திறனாளி

2 mins read
d63e3041-d50c-4acf-b46e-291ec279c53f
கடும் பாதுகாப்பான சிறையிலிருந்து கோவிந்தசாமி தப்பியது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. - படம்: இந்து தமிழ் திசை

கண்ணூர்: கேரளாவில் சிறையிலிருந்து தப்பிய மாற்றுத் திறனாளி சில மணிநேரங்களில் பிடிபட்டார்.

கேரளாவை உலுக்கிய சவுமியா கொலை வழக்கு குற்றவாளியான அவர் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தார்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சவுமியா,27, கொச்சியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு எர்ணாகுளம் - சொர்ணூர் ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த அவர், பெண்கள் பெட்டியில் தனியாக பயணம் செய்தார்.

அங்கு வந்த மாற்றுத்திறனாளியான கோவிந்தசாமி, பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். அவரிடம் தப்பிக்க முயன்ற சவுமியாவை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அந்த மாற்றுத்திறனாளியும் குதித்துள்ளான்.

பிறகு, பலத்த காயங்களுடன் கிடந்த சவுமியாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தான். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், அதனை ஏழு ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி, நள்ளிரவு 1 மணியளவில் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

சிறைக் கம்பிகளை உடைத்து வெளியேறிய அவன், துணிகளை கயிறு போல கட்டி சிறையின் சுற்றுச்சுவரை தாண்டி தப்பிச் சென்றது தெரிய வந்தது.

அதிக பாதுகாப்புள்ள சிறை பிரிவில் மின்வேலி கொண்ட சுற்றுச்சுவரை தாண்டி கோவிந்தசாமி தப்பிச் சென்றிருப்பது காவல்துறைக்குப் புரியாத புதிராக உள்ளது.

கோவிந்தசாமி தப்பிச் செல்லும் சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அவருக்கு யாராவது உதவி செய்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கோவிந்தசாமியை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதையடுத்து தப்பிச் சென்ற கோவிந்தசாமியை கண்ணூரில் உள்ள தாலப் பகுதியில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

அங்கு பயன்படுத்தாத கட்டடத்தில் இருந்த கிணற்றில் கோவிந்தசாமி பதுங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்