மேம்பாலத்திலிருந்து பேருந்து விழுந்து ஒருவர் பலி; 40 பேர் காயம்

மேம்பாலத்திலிருந்து பேருந்து விழுந்து ஒருவர் பலி; 40 பேர் காயம்

1 mins read
21fac28b-444c-4d76-99c5-332cff6e784a
பேருந்தின் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகக் காயமடைந்த பயணிகள் கூறினர். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

பரேலி: மேம்பாலத்திலிருந்து பேருந்து கீழே விழுந்ததில் பயணி ஒருவர் மாண்டுபோனார்; மேலும் 40 பேர் காயமுற்றனர்.

இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் திங்கட்கிழமை (மே 20) அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்தது.

உயிரிழந்தவர் மீரட் நகரைச் சேர்ந்த பிரேம் கிஷன், 40, என்று அடையாளம் காணப்பட்டதாக மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் பரேலியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் திரு ரவீந்திர குமார் கூறினார்.

அப்பேருந்து கிட்டத்தட்ட 70 பயணிகளுடன் டெல்லியிலிருந்து பரேலிக்குச் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், ஃபத்கஞ்சிலுள்ள பலியா மேம்பாலத்தில் சென்றபோது ஓட்டுநர் அதன் கட்டுப்பாட்டை இழந்ததால், தடுப்புச்சுவரில் மோதி கீழே இருந்த துணைச்சாலையில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பேருந்தின் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகவும் நீண்டநேரமாகவே கண்மூடித்தனமாக அதனை ஓட்டிவந்ததாகவும் காயமடைந்த பயணிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்