நாட்டின் நலன் கருதியே ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர்

1 mins read
8c31aaea-8243-4c6b-ae3f-c57a348ccf36
பிபி சௌத்ரி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்து நாட்டின் நலன் கருதி மட்டுமே தெரிவிக்கப்பட்ட ஒன்று என இந்திய நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவரும் பாஜக எம்பியுமான பிபி சௌத்ரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓரே நாடு ஒரே தேர்தல் குறித்து அனைத்து தரப்பினரிடமும் எல்லா கருத்துகளும் விவாதிக்கப்படும் என்றார்.

“அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகு கூட்டுக்குழு தனது பரிந்துரையை வழங்கும். இது நாட்டின் நலன் சம்பந்தபட்ட விஷயம்.

“எனவே, பொருளியல் அம்சமாக இருந்தாலும் நிர்வாக அம்சமாக இருந்தாலும் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும்,” என்றார் பிபி சௌத்ரி.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவுக்கான குழுவின் அறிக்கை காலத்தை நீட்டிக்கும் தீர்மானத்தை மக்களவை ஏற்றுக்கொண்டது.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த மசோதா நிச்சயமாக நிறைவேற்றப்படும் என பாஜக தரப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்