சொத்து மதிப்பை இரட்டிப்பாக்க இருக்கும் ‘ஓலா இலெக்ட்ரிக்’ பாவிஷ் அகர்வால்

1 mins read
47ed1847-f3d7-47f6-bf20-9af8a7f25e43
‘ஓலா இலெக்ட்ரிக்’ நிறுவனத்தின் நிறுவனர் பாவிஷ் அகர்வால். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ‘ஓலா இலெக்ட்ரிக்’ நிறுவனத்தின் நிறுவனரான 38 வயது திரு பாவிஷ் அகர்வால் தமது சொத்து மதிப்பை இரட்டிப்பாக்க இருக்கிறார்.

‘ஓலா இலெக்ட்ரிக்’ நிறுவனம் இந்தியப் பங்குச் சந்தையில் இடம்பெற இருக்கிறது.

அதன் ஒரு பங்கின் விலை 72 ரூபாய் (S$1.14) ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சாஃப்ட்பேங் குரூப் கோர்ப்’பின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ‘ஓலா இலெக்ட்ரிக்’ நிறுவனத்தின் இந்த முயற்சி கைகூடினால் திரு அகர்வாலுக்குக் கூடுதலாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கும்.

இதன்மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு 2.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று புளூம்பர்க் பெருஞ்செல்வந்தர் குறியீடு தெரிவித்துள்ளது.

அவ்வாறு நேர்ந்தால் உலகின் ஆக இளைய பெருஞ்செல்வந்தர்கள் பட்டியலில் திரு அகர்வால் இடம்பெறுவார்.

2021ஆம் ஆண்டில் ‘ஓலா இலெக்ரிட்’ மின்ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது.

ஆனால், சில மின்ஸ்கூட்டர்களின் மின்கலங்கள் தீப்பிடித்து எரிந்தன.

இதையடுத்து, விற்கப்பட்ட 1,400 மின்ஸ்கூட்டர்களை ‘ஓலா இலெக்ட்ரிக்’ நிறுவனம் மீட்டுக்கொண்டது.

இது அந்நிறுவனத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்