புதுடெல்லி: இந்தியாவின் பல நகரங்களில் வெங்காய விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக என்டிடிவி (NDTV) போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்களை அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஒட்டுமொத்த விற்பனைச் சந்தைகளில் 40லிருந்து 60 ரூபாய்க்கு இடைப்பட்டிருந்த வெங்காய விலை கிலோவுக்கு 40லிருந்து 70லிருந்து 80 ரூபாய்க்குக் கூடியது.
கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) நிலவரப்படி தலைநகர் டெல்லியில் ஒரு கிலோவுக்கான வெங்காய விலை 60லிருந்து 70 ரூபாய்க்கு அதிகரித்தது. மும்பை போன்ற நகரங்களிலும் அதன் விலை கூடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பல மாநிலங்களில் வெங்காய விலை அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.