மாணவர் விடுதிகளில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்

மாணவர் விடுதிகளில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்

1 mins read
828ba7b2-1a42-492c-a6eb-fdd59e2b494e
அமைச்சர் மெய்யநாதன். - படம்: ஊடகம்

சிவகங்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகள் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

சிவகங்கையில் நேற்று அமைச்சர் மெய்யநாதன், அளித்த பேட்டியில், “முதல்வர் அறிவித்துள்ள புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலமாக கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 36 கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 19 விடுதிகள் திறக்கப்பட்டன.

“நடப்பாண்டில் 10 விடுதிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகள் விடுதிகளிலும் ரூ.10 கோடிக்கும் மேற்பட்ட செலவில் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்படும்,” என்று அவர் தெரிவித்தார்

குறிப்புச் சொற்கள்