தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய குடிமக்களின் குமுறலை வெளிப்படுத்தும் நடவடிக்கை: மோடி

2 mins read
276b2569-ab60-4a2f-96e7-33fcdb33b105
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல என்றும் அது இந்திய குடிமக்களின் குமுறலை வெளிப்படுத்தும் நடவடிக்கை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதே ஒவ்வோர் இந்தியரின் லட்சியம் என்றும் 122வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

“பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். நாடு தேசபக்தியில் மூழ்கி உள்ளது. ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, நமது பாதுகாப்புப் படையினர் துணிச்சலாகச் செயல்பட்டது ஒவ்வோர் இந்தியரையும் பெருமைப்படுத்தியது.

“உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை புதிய நம்பிக்கையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது,” என்றார் பிரதமர் மோடி.

இதனிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளில், கிர் காடுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை 674ல் இருந்து 891ஆக அதிகரித்துள்ளதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார். இது ஊக்கமளிப்பதாகவும் விலங்கு கணக்கெடுப்புப் பணி சவாலானது என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்தப் பணி 35,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டது, தீவிர சுற்றுக்காவல் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு ஊக்கமளிக்கிறது. வனவிலங்கு பாதுகாப்பு குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று திரு மோடி அறிவுறுத்தினார்.

மேலும், ஜீவன் ஜோஷி என்பவரைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

“65 வயதான ஜீவன் ஜோஷி பற்றி சொல்ல விரும்புகிறேன். அவர் போலியோவால் பாதிக்கப்பட்டார், தொடர்ந்து போராடினார். அவர் தனது வாழ்க்கையை கலைகளுக்காக அர்ப்பணித்துள்ளார். அவரது பணி கலைகளுக்கு மட்டுமல்ல, பக்திக்கும் உரியது. வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை எடுத்துரைத்தார்,” என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

குறிப்புச் சொற்கள்