ஆப்பரேஷன் சிந்தூர்: ஃபேஸ்புக் பதிவால் பெண்மீது வழக்குப்பதிவு

1 mins read
21ddfbfc-08e2-41d2-aec4-829dd1e2a81a
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடவடிக்கையைக் குறைகூறியதாகக் கருதி, அப்பெண்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. - மாதிரிப்படம்: பிக்சாபே

மும்பை: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடவடிக்கையைக் குறைகூறி ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பெண்மீது மும்பைக் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

நாற்பது வயதான அப்பெண் மும்பையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அவரது பதிவைக் கண்ட ஒருவர், அதுபற்றிக் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டுசென்றார்.

“தலைக்கு மேலே அமைதி... அரசாங்கங்களின் பொறுப்பற்ற முடிவுகளுக்கு இருதரப்பிலும் அப்பாவி மக்களே விலைகொடுக்க வேண்டியுள்ளது - அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லர்,” என்று அப்பெண் தமது பதிவில் குறிப்பிட்டிருந்ததாக ஞாயிற்றுக்கிழமை (மே 11) காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“அவரது பதிவு தேசியப் பாதுகாப்பு நடவடிக்கையை அவமதிக்கும் வகையிலும் உணர்ச்சியைத் தூண்டும் வகையிலும் இருந்ததாகக் கருதப்பட்டது. அதனால், உரிய விதிகளின்கீழ், அவருக்கு அறிவிப்புக் கடிதம் அனுப்பியுள்ளோம். இதற்குமுன் அவர்மீது எந்தப் புகாரும் வழக்குகளும் இல்லை,” என்று அந்த உயரதிகாரி விளக்கினார்.

முதற்கட்ட விசாரணையை அடுத்து, அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்