இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் பேரணி

இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் பேரணி

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: என்டிடிவி

06 Oct 2026 - 3:18 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியத் தலைநகரில் உள்ள அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் நோக்கி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) இண்டியா கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் பேரணியாகச் சென்றனர்.

இதையடுத்து, டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், டெல்லி மாநகரம் முழுவதும் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத் தலைமையகத்துக்கு வெளியே இரும்புத்தடுப்புகளுடன் கூடிய பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு கருதி அங்கு காவலர்கள் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தைக் கருவியாகப் பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா கூட்டணியைக் கண்டிப்பதோடு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணியின் சார்பாக டெல்லி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணைய விவகாரம் குறித்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இண்டியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அதில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, டெல்லியில் பேரணி நடைபெறுகிறது.

பேரணியில் ப.சிதம்பரம், திருமாவளவன், துரை வைகோ, சு.வெங்கடேசன் உள்ளிட்ட தமிழக அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
இந்தியத் தேர்தல்தேர்தல் ஆணையம்ஆணையர்இண்டியாகூட்டணிஎதிர்க்கட்சிபோராட்டம்காவல்துறைகண்காணிப்பு