பேருந்தில் குறும்பு; வாலிபரை அறைந்த ஆசிரியை

1 mins read
cf5cc34b-0572-4d3e-a55a-084e512114fb
வாலிபரின் சட்டையைப் பிடித்து பல முறை ஆசிரியை அறைந்தார். - படம்: லோக்மட் எக்ஸ் காணொளி

புனே: மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியைச் சேர்ந்த ஆசிரியை பிரியா லஷ்கரே. புனேவில் பேருந்தில் பயணம் செய்தபோது அத்துமீறி நடந்துகொண்ட வாலிபரை அறைந்து சாத்தியிருக்கிறார்.

அந்த வாலிபர், ஆசிரியர் பிரியா லஷ்கரேவிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆவேசம் அடைந்த பிரியா போதை வாலிபரை கன்னத்தில் அறைந்தார்.

அப்போதும் அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த வாலிபரின் கன்னத்தில் பிரியா 25க்கும் மேற்பட்ட முறை அறைந்தார்.

இது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவிய நிலையில், வலைப் பதிவாளர்கள் பிரியாவின் துணிச்சலைப் பாராட்டியிருக்கின்றனர்.

“என்ன ஒரு ஷாட்! இது ஒரு பெண்ணின் சரியான பதில். எல்லா பெண்களும் இவரிடம் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று வலைப்பதிவாளர் ஒருவர் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்