தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

22,500 பேர் வரி ஏய்ப்பு; 500 கோடி ரூ. மோசடி

1 mins read
4f05eca6-7f0f-45c7-a2ce-9b7625f6c971
ரூபாய் நோட்டுகள். - படம்: ராய்ட்டர்ஸ்

சென்னை: தமிழகத்தில் சுமார் 22,500 பேர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரித் துறை கூறியுள்ளது.

வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள், தமிழகத்தில் மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

போலியான வருமான வரித்தாக்கல் ஆவணங்கள் வழியாக வரி ஏய்ப்பு நடப்பதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன், வருமான வரி விலக்கு பெறுவதற்காக, வீட்டு வாடகைக் கட்டணங்களைத் தாங்கள் செலுத்தியது போலக் காண்பிக்கும் போலி ஆவணங்களை அவர்கள் கொடுக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பொதுத்துறை, தனியார் ஊழியர்களின் வருமான வரி தாக்கல்கள் கூடுதலாகக் கண்காணிக்கப்படும் என்று வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.

வரிப்பணம் செலுத்தும்படியான நினைவூட்டல் கடிதத்தை வருமான வரித்துறை, சம்பளம் வாங்குவோருக்கு அனுப்பிவிடும்.

பொய்யான வீட்டு வாடகைக்கான கட்டணக் குறிப்புகளைக் கொடுத்தவர்கள் இம்முறை சோதனைக்கு உள்ளாக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 40,000க்கும் அதிகமானோருக்கு வருமான வரித்துறை சார்பாக அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களின் வருமான வரி முறைகேடுகள் அல்லது தவறுகளை விளக்க அந்தக் கடிதங்கள் கோரும்.

குறிப்புச் சொற்கள்