தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பார் என 40% இந்தியர்கள் கருத்து

2 mins read
8f8ce45c-68df-4e61-b82c-af67391a1738
அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக டிரம்ப் நிர்வாகம் புகார் கூறியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

மும்பை: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியாவுக்குச் சாதகமாக இருப்பார் என 40 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்தியர்கள் கருதுவதாக இந்திய ஊடகம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பு விவரம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை திரு டிரம்ப் சந்திப்பதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த விவரம் வெளியிடப்பட்டது.

அதில், திரு டிரம்ப்பின் இரண்டாம் தவணைப் பதவிக்காலம் தங்கள் நாட்டிற்குச் சாதகமாக இருக்கும் என்று இந்தியா டுடே இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திரு மோடியிடமும் மற்றும் அவரது கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்களிடமும் திரு டிரம்ப் ஒரு நேர்மறையான தோற்றத்தைப் பெற்றுள்ளதாக ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கணக்கெடுப்பு விவரம் தெரிவிக்கிறது.

ஆய்வில் கலந்துகொண்டோரில் 16 விழுக்காட்டினர் மட்டுமே அவரால் பயனில்லை அல்லது இந்தியாவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என கருதியதாக ஆய்வு காட்டியது. ஆய்வில் கலந்துகொண்ட இதர மக்களின் கருத்துப்படி, திரு டிரம்ப் இந்தியாவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இறக்குமதிகள் மீது வரி விதிக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் பரஸ்பர வரிகளை விதிக்கப் போவதாக திரு டிரம்ப் கூறிய சில மணி நேரங்களுக்கு முன்பு புதன்கிழமை (பிப்ரவரி 12) தாமதமாக இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக டிரம்ப் நிர்வாகம் புகார் கூறியுள்ளது. இப்போது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் திரு மோடியும் அவரது கூட்டணிக் கட்சிகளும் 47% வாக்குகளைப் பெறும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 41% வாக்குகளைப் பெறும் என்றும் கருத்துக்கணிப்பு சுட்டியது.

திரு மோடியின் பாஜக, 2024 பொதுத் தேர்தலில் 10 ஆண்டுகளில் முதல்முறையாக பெரும்பான்மையை இழந்து கூட்டணிக் கட்சிகளை நம்பி ஆட்சி அமைத்தது. அதன்பிறகு, இந்தியாவில் மந்தமான பொருளியல் நீடிக்கும் நிலையிலும் பாஜக கூட்டணி அண்மையில் மூன்று முக்கிய மாநிலத் தேர்தல்களில் வென்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்