இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணச்செலவு குறைந்தது

இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணச்செலவு குறைந்தது

1 mins read
778951e3-66c2-43b8-82b0-8b82568eedb2
மார்ச் மாதம் கல்விக்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ரூ. 4,300 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் கூறியுள்ளது. - கோப்புப் படம்: பிஎஸ்யு கனெக்ட்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு, கடந்த மார்ச் மாதத்தில் கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கித் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ. 15.790 கோடி (1.65 பில்லியன் அமெரிக்க டாலர்) என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த மார்ச் மாதம் அந்தச் செலவுத்தொகை ரூ. 10,043 கோடியாக (1.09 பில்லியன் அமெரிக்க டாலர்) குறைந்துவிட்டது.

இதனிடையே, பிப்ரவரி மாதம் பயணச் செலவு ரூ. 12,441 கோடி (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்) என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளியல் சூழலைக் கவனத்தில் கொண்டு இந்தியர்கள் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கேட்டுக்கொண்டார்.

எனினும், அதற்கு முன்னரே பயணச்செலவு குறைந்துவிட்டது என்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அனைத்துலகச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, மருத்துவம்-கல்விக்கான பயணங்கள் என வெளிநாட்டுப் பயணங்கள் வகைப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள இந்திய மத்திய வங்கி, விடுமுறைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுச் சுற்றுலா உள்ளிட்ட பயணங்களுக்காக இந்தியர்கள் ஏறக்குறைய ரூ. 5,962 கோடி செலவிடுவதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அது இந்தியர்களின் ஒட்டுமொத்த பயணச் செலவில் 57 விழுக்காடு ஆகும்.

மார்ச் மாதம் கல்விக்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ரூ. 4,300 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ரிசர்வ் வங்கிஅமெரிக்க டாலர்ரூபாய்வெளிநாடுபயணம்செலவுசுற்றுலா