புதுடெல்லி: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டதற்காக ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு இப்பதிப்பகம் ‘சிவாஜி: இஸ்லாமிய இந்தியாவின் இந்து மன்னன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டது. அதில் ஆதாரமற்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக அப்போதே எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புகாரை ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைப் பதிப்பகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக சத்ரபதி சிவாஜியின் 13வது தலைமுறை வாரிசும் இந்திய எம்பியுமான உதயன் ராஜே போஸ்லேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தாங்கள் வெளியிட்ட புத்தகத்தின் குறிப்பிட்ட சில பக்கங்களில் ஆதாரமற்ற தகவல்கள் இடம்பெற்றிருப்பதை ஒப்புக்கொள்வதாகவும் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பல்கலைப் பதிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

