டிம் குக்குடன் பூப்பந்து விளையாட சம்மதித்த பி.வி.சிந்து

டிம் குக்குடன் பூப்பந்து விளையாட சம்மதித்த பி.வி.சிந்து

படம்: இணையம்

14 Sep 2023 - 6:12 pm

1 mins read

புது டெல்லி: ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமையகத்தில் புதிய ஐஃபோன் 15 ரகக் கைபேசிகளையும் கைக்கடிகாரங்களையும் அதன் தலைமை நிர்வாகியான டிம் குக் செப்டம்பர் 12ஆம் தேதி அறிமுகம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமான பி வி சிந்துவும் கலந்துகொண்டார். அவர், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக்குடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டார்.

“ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான குக்கை சந்தித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.”

“அவரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.”

“அடுத்தமுறை இந்தியா வரும்போது பூப்பந்து விளையாடுவதற்கு அவர் எனக்களித்த வாய்ப்பை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்,” என இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்