இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் நாட்டின் பிஐஏ விமானம் 10 நிமிடங்களுக்கும் மேலாக பறந்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளதாகவும் இந்திய விமானப் படை கூறியது.
மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் எல்லை தாண்டியதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் மே 4ஆம் தேதி இரவு 8:40 மணிவாக்கில் நடந்தது.
விமானம், மஸ்கட்டிலிருந்து லாகூரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
சிறிது நேரம் வானில் வட்டமடித்த விமானம் இந்தியாவின் பஞ்சாப் மாநில எல்லைக்குள் தவறுதலாக நுழைந்தது. அதன் பின்னர் மீண்டும் பாகிஸ்தானுக்குள் சென்றது.
பிஐஏ விமானங்கள் சில இந்தியாவில் பறக்க அனுமதி உண்டு, அதே நேரம் இந்திய விமானங்கள் சிலவும் பாகிஸ்தானில் பறக்க அனுமதி உண்டு.

