ஜம்மு காஷ்மீர்: “பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் இடம்பெறாமல் ஜம்மு காஷ்மீர் முழுமை அடையாது,” என்று தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு அருகே உள்ள அக்னுார் என்ற இடத்தில், 9ம் ஆண்டு ஆயுதப்படை வீரர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அந்த உரையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது அந்த நாட்டைப் பொறுத்தவரை ஒரு அந்நிய நாட்டின் நிலமே. பாகிஸ்தான் காஷ்மீரில் அந்நாடு பயங்கரவாத வேலைகளைச் செய்கிறது. அங்கு பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்துகிறது. அந்நாடு அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
காஷ்மீர் மக்களுக்கும் நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கும் உள்ள இடைவெளியைப் போக்குவதற்கு பாஜக அரசு பாடுபட்டு வருகிறது.
அந்த வகையில் மத்திய அரசுக்கு சிறப்பாக ஒத்துழைப்புத் தரும் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேலும் அவர், “இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் துாண்டும் வகையில் பேசி வரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் முதலமைச்சர் சௌத்ரி அன்வருல் ஹக்குக்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டார். மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்றி ஜம்மு - காஷ்மீர் ஒருபோதும் முழுமை பெறாது,” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் அந்நாடு பயங்கரவாத வேலைகளைச் செய்கிறது. அங்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி முகாம்களை நடத்தி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. அந்நாடு அதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த 1965 ஆம் ஆண்டு அக்னூரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சிகளை முறியடிப்பதில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போது இருந்து பாகிஸ்தான் சட்டவிரோத ஊடுருவலை ஊக்குவித்து வருகிறது என்றார் ராஜ்நாத் சிங்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக அவர், அக்னுாரில், 108 அடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ராணுவத்தின் பாரம்பரிய அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், நாங்கள் டெல்லியைப் போலவே அக்னூர் அல்லது காஷ்மீரை எங்களின் இதயங்களில் வைத்துள்ளோம்” என்று ராஜ்நாத் சிங் பேசினார்.

