புதுடெல்லி: எதிரும் புதிருமாக இருந்த பாகிஸ்தானும் பங்ளாதேஷும் தங்களுடைய நாடுகளுக்கு இடையே விசா இல்லாமல் பயணம் செய்வதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டன.
இதை அண்டை நாடான இந்தியா மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
பங்ளாதேஷில் ஷேக் ஹசினா பிரதமராக இருந்தவரையில் அந்நாட்டின் நட்பு நாடாக இந்தியா இருந்தது.
ஆனால்,எதிர்பாராதவிதமாக முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசாங்கம், பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தற்போது புதிய ஒப்பந்தம் ஒன்றை இரு நாடுகளும் செய்து கொண்டன.
இருநாடுகளைச் சேர்ந்த தூதரக மற்றும் உத்தியோகப்பூர்வ கடவுச்சீட்டு வைத்துள்ளவர்ளுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
டாக்காவில் நடந்த உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி மற்றும் பங்ளாதேஷின் உள்துறை அமைச்சர் ஜஹாங்கிர் அலாம் சவுத்ரி முன்னிலையில் புதன்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.
இரு நாடுகளும் பல் வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது. பங்ளாதேஷில் சிறுபான்மை இந்துக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இருநாடுகளும் நட்பு பாராட்டுவதை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.