பொற்கோவிலைக் குறிவைக்கும் பாகிஸ்தான்: சூளுரைத்த இந்திய ராணுவம்

1 mins read
2c075db8-c366-43c5-835d-082d72c886f6
அமிர்தசரஸ் பொற்கோவிலை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.  - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் மேற்கு எல்லைகளில் பாகிஸ்தான் ஆளில்லா வானூர்திகள் (டிரோன்கள்), ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ் பொற்கோவிலை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கைக் குறியீடு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில், அமிர்தசரஸின் காசாகான்ட் மீது பல ஆயுதமேந்திய டிரோன்கள் பறந்து செல்வது காணப்பட்டதாக இந்திய ராணுவம் கூறியது.

உடனடியாக இந்திய பாதுகாப்புப் படையினர் அவற்றை சுட்டு வீழ்த்தியதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் சதித்திட்டங்களை அனுமதிக்க இயலாது. பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்,” என்று இந்திய ராணுவம் சூளுரைத்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்