காதலுக்காக இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கிய பாகிஸ்தான் பெண் நாடு திரும்பினார்

காதலுக்காக இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கிய பாகிஸ்தான் பெண் நாடு திரும்பினார்

1 mins read
b7f329fe-eb53-4efb-9fe5-563fc66c7db5
படம்: பிக்ஸாபே -

பாகிஸ்தானைச் சேர்ந்த 16 வயது பெண் தமது இந்திய காதலனுக்காக சட்டவிரோதமாக நான்கு மாதம் இந்தியாவில் தங்கியுள்ளார்.

அவர் இப்போது அதிகாரிகளால் அடையாளம்கண்டு பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தை சேர்ந்த இக்ரா ஜீவானி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேப்பாளம் எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.

அவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 25 வயது ‌ஷொகைலை சந்திந்து திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் இணைய விளையாட்டான லூடோவில் அறிமுகமாகி பின்னர் காதலித்துள்ளனர்.

ஷொகைலின் உண்மையான பெயர் முலாயம் சிங். அவர் போலியாக நடித்து இக்ராவை ஏமாற்றியதாக பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இக்ரா ஜனவரி மாதம் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 19ஆம் தேதி அவர் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.