தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்லவராயர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

1 mins read
770e34ae-46af-4fb3-96f8-6511e9c35e53
நிலம் தானமாக வழங்கப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டு. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பல்லவராயர் காலத்து கல்வெட்டு ஒன்று  புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

அந்த மாவட்டத்திற்குட்பட்ட இலுப்​பூர் வட்​டம் மாராயப்​பட்​டியைச் சேர்ந்த கல்​லூரி மாணவி தீபி​கா, அங்​குள்ள கண்​டனி குளத்து வயல்​வெளி​யில் கற்பலகை ஒன்று காணப்படுவதாகவும் அதில் பழங்கால எழுத்துகள் இருப்பதாகவும் தகவல் தெரிவித்து இருந்தார்.

அந்தத் தகவலின்​பேரில், பேராசிரியர் முத்​தழகன், பாண்​டிய நாட்டு பண்​பாட்டு மையத்​தைச் சேர்ந்த தொல்​லியல் ஆர்​வலர்​கள் நாராயண​மூர்த்​தி, ராகுல் பிர​சாத் ஆகியோரைக் கொண்ட குழு அங்கு சென்று ஆய்வு செய்​த​போது, அந்த கற்பலகை பழங்கால பல்லவராயர் கல்வெட்டு என்பது தெரியவந்தது.

அதுகுறித்து பேராசிரியர் முத்தழகன் கூறும்போது, “மாராயப்​பட்டி கண்​டனி வயல்வெளி நடுவே கால​முனி கோயி​லின் எல்​லை​யாக வணங்​கப்​பட்டு வரும் கல் தூணுக்கு எதிரே கற்பலகை ஒன்று ஊன்றப்பட்டுள்ளதைக் கண்டோம்.

“அந்தப் பலகை மூன்றடி உயரம், இரண்​டே​கால் அடி அகலம் கொண்டதாக உள்ளது. அதன் ஒரு​புறத்​தில், ஆனந்த வருடம் ஆவணி 6ஆம் நாள் ஆரியூர் அழகிய சொக்​க​நாத சுவாமிக்கு சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர், கண்​டனி வயல்வெளி நிலங்​களை மானிய​மாக வழங்​கிய செய்தி எழுதப்​பட்​டுள்​ளது. 

“மேலும், இந்த நில தானத்​துக்கு தீங்கு நினைப்​பவர்​கள் சிவதுரோகி​களாகக் கருதப்​படு​வர் எனவும் அந்தக் கற்பலகையில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது,” என்றார்.

கல்​வெட்​டில் குறிப்​பிடப்​பட்​டுள்ள சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர், கி.பி. 17ஆம் நூற்​றாண்​டில் புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் வெள்​ளாற்​றுக்கு வடக்கே உள்ள பகு​தி​களை ஆட்சி செய்த பல்​ல​வ​ராயர் மரபின் கடைசி அரசர் ஆவார்.

குறிப்புச் சொற்கள்