டெல்லி விமான நிலையத்தில் காரை நிறுத்திய ஆடவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

டெல்லி விமான நிலையத்தில் காரை நிறுத்திய ஆடவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

1 mins read
d310bab8-cfeb-4952-b552-f0c41e67f7c8
டீபக், 5,770 ரூபாய் கட்டணச் சீட்டைப் பெற்றார். - படம்: பிக்சாபே

புதுடெல்லி: இந்தியாவின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் காரை நிறுத்திய ஆடவருக்கு 5,770 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது.

‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட டீபக் கோசை என்ற அந்த ஆடவர், ஆகஸ்ட் 17ஆம் தேதி மூன்றாம் முனையத்தில் உள்ள பல மாடி கார் நிறுத்தும் இடத்தில் தமது வாகனத்தை நிறுத்தியதாகக் கூறினார்.

அவர் ஆகஸ்ட் 26ஆம் தேதி திரும்பிவந்ததும், 5,770 ரூபாய் கட்டணச் சீட்டைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.

இருப்பினும், கட்டணம் மட்டுமே பிரச்சினை அல்ல. காரைச் சென்றடைந்த டீபக், அது சேதமடைந்திருந்ததையும் கண்டார்.

கார் கதவின் பூட்டு உடைந்திருந்ததோடு, காரில் பல கீறல்கள் இருந்தன. புகார் செய்ய முயன்றபோதும், வாகன நிறுத்துமிட அதிகாரிகளிடமிருந்து அவருக்கு உதவி கிடைக்கவில்லை. அவர்கள் ஏற்கெனவே கட்டணத்தை வாங்கிவிட்டுச் சென்றுவிட்டனர். அவரின் புகார்களுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றார் டீபக்.

சினமடைந்த டீபக் சமூக ஊடகத்தில் அவரது பிரச்சினையைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். அவருக்கு விதிக்கப்பட்ட கட்டணம், டெல்லியிலிருந்து லக்னோவுக்கான இருவழிப் பயணக் கட்டணத்தைவிட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்