சென்னை: மதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை எட்டி வைகோவின் மகன் பதவி விலகியிருக்கிறார்.
மதிமுகவின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து திருச்சி எம்பியுமான துரை வைகோ பதவியிலிருந்து விலகியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளரான வைகோவின் மகன் துரை, கட்சியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
முக்கிய மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் கட்சியிலிருந்து வெளியேறினர்.
ஆனால் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா வெளியேறாமல் இருந்தார்.
மேலும் கட்சியின் முன்னணி நிர்வாகியாக அவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கட்சியில் அதிகார மையமாக உருவெடுத்த துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது, பின்னர் மோதலாக வெடித்தது.
இதன் உச்சக்கட்டமாக மதிமுகவின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து வைகோ மகனும், திருச்சி எம்.பி.,யுமான துரை வைகோ விலகினார்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழக அரசியலில் மதிமுக வலிவும், பொலிவும் பெற வேண்டும் என அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன். மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காண்பதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன். மதிமுகவின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்,” என்று அறிக்கை ஒன்றில் துரை வைகோ கூறியுள்ளார்.