தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஸ்தாராவுக்கு விமான நிலைய ஊழியர்களின் உணர்வுபூர்வ பிரியாவிடை

1 mins read
2aaea074-9569-41fd-8a05-98a41e0b4a56
விஸ்தாராவின் இறுதி விமானப் பயணம் புதுடெல்லியிலிருந்து சிங்கப்பூருக்கு நவம்பர் 11ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டது. - படம்: Reddit/jaiho1985

புதுடெல்லி: டாட்டா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றுக்குச் சொந்தமான விஸ்தாரா, ஏர் இந்தியாவுடன் இணைவதால் அதன் ஒன்பது ஆண்டுகால பயணம் நவம்பர் 11ஆம் தேதியோடு ஒரு முடிவுக்கு வந்தது.

விஸ்தாராவின் இறுதி விமானப் பயணம் புதுடெல்லியிலிருந்து சிங்கப்பூருக்கு இரவு 11.50 மணி புறப்பட்டதாக விமானப் பயணி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அந்தப் பயணி, தாம் பிடித்த படங்களை ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

விமான நிலைய ஊழியர்கள் வரிசையாக நின்றவாறு விஸ்தாரா விமானத்தை நோக்கிக் கையசைத்து உணர்வுபூர்வமாகப் பிரியாவிடை அளிப்பதாக அப்படங்கள் அமைந்துள்ளன.

இதையடுத்து, படங்கள் இணையவாசிகளிடையே அதிக பாராட்டையும் பார்வையையும் பெற்று வருகின்றன. விமானப் பயணச்சீட்டைப் பத்திரமாக வைத்திருக்குமாறு ஓர் இணையவாசி பதிவிட்டிருந்தார். உள்ளூர் விமான நிறுவனங்களில் ஆகச் சிறந்தது என்று விஸ்தாராவை மற்றோர் இணையவாசி பாராட்டி இருந்தார்.

குறிப்புச் சொற்கள்