ஸ்பைஸ்ஜெட் விமானச் சேவை இரு நாள்கள் முடங்கியதால் மும்பையில் பயணிகள் தவிப்பு

ஸ்பைஸ்ஜெட் விமானச் சேவை இரு நாள்கள் முடங்கியதால் மும்பையில் பயணிகள் தவிப்பு

படம்: இந்தியா டுடே

18 Nov 2026 - 5:50 pm

2 mins read

மும்பை: தொடர்ந்து இரண்டு நாள்களாக ஸ்பைஸ்ஜெட் விமானச் சேவையில் ஏற்பட்ட இடையூறுகளால் மும்பை விமான நிலையத்தில் மீண்டும் கடும் அமளி ஏற்பட்டது.

திங்கட்கிழமை (நவம்பர் 16) முனையம் 1ல் இருந்து ஒரு விமானம்கூட புறப்படாத நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பயணிகள் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் தாமதத்தை எதிர்கொண்டனர்.

திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களும் அடுத்தடுத்து விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான ஸ்பைஸ்ஜெட் பயணிகள் மும்பை விமான நிலையத்தில் தவிப்புக்குள்ளாகினர்.

செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொள்ளவிருந்த ஸ்பைஸ்ஜெட் பயணிகள், தாங்கள் இரவு 7 மணிக்குள் விமான நிலையத்திற்கு வந்துவிட்டதாகவும் ஆனால் அதன்பிறகு ஒரு விமானம் கூட புறப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

பல மணி நேரக் காத்திருப்பு மற்றும் நிச்சயமற்ற நிலைக்குப் பிறகு, அவர்களது விமானம் ஒருவழியாக புதன்கிழமை (நவம்பர் 18) அதிகாலை 4 மணியளவில் புறப்பட்டது.

முன்னதாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எதிர்கொள்ளும் செயல்பாட்டுச் சிக்கல்கள் காரணமாக, பயணிகள் தங்களது விமானத்தின் தற்போதைய நிலையைத் தொடர்ந்து தெரிந்துகொள்ளுமாறு விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

“ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் எதிர்கொண்டு வரும் தொடர்ச்சியான செயல்பாட்டுச் சிக்கல்கள் காரணமாக, மும்பைக்கு வரும் மற்றும் மும்பையிலிருந்து புறப்படும் சில விமானச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும்.

“பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பாக, விமான நிறுவனத்திடம் தங்களது விமானத்தின் நிலையைச் சரிபார்த்துக்கொள்ளுமாறும் அண்மைத் தகவல்களுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்