தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் அறிவிப்பு

1 mins read
6b1c7d05-f641-4f7a-bf2a-3dd8000734f1
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக முன்னாள் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தைப் பற்றி பேசி இருக்கிறார்கள். என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

“அவற்றைப் பரிசீலித்துப் பார்த்து, முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் 30 ஆயிரம் ரூபாய் என்பதை, 35 ஆயிரம் ரூபாயாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும்.

“முன்னாள் சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தை 15 ஆயிரம் ரூபாய் என்பது, மாதமொன்றுக்கு 17,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

“முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி 75 ஆயிரம் ரூபாய் என்பது, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

“ஏற்கெனவே, இந்த ஆண்டின் மருத்துவப் படித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாய், இதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பின்னர் வழங்கப்படும் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்