ஜம்மு/காஷ்மீர்: சியாச்சின் பனிமலை, கல்வான் பள்ளத்தாக்கு, காா்கில் போா்க் களப் பகுதிகள் ஆகியவற்றைப் பார்வையிட சுற்றுப்பயணிகளுக்கு அனுமதி வழங்க இந்திய ராணுவம் தீா்மானித்துள்ளது. போா்க் களங்கள் குறித்த அனுபவத்தை சுற்றுலா பயணிகள் பெறும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
“உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளைப் பெரிதும் ஈா்க்கக் கூடிய இடமாக ஜம்மு-காஷ்மீா் விளங்குகிறது. அங்கு சுற்றுலாவை மேம்படுத்த 48 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநிலம், புனேயில் புதன்கிழமையன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உரையாற்றியபோது கூறினார்.
மேலும், முறையாக இலக்கு நிா்ணயித்து செயல்பட்டால், அவ்விடங்களுக்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சியாச்சின் பனிமலை, காா்கில், கல்வான் பள்ளத்தாக்கு ஆகியவை லடாக்கில் உள்ளன. இதில் சியாச்சின் பனிமலை உலகின் உயரமான மற்றும் மிகவும் குளிரான போர்க்களம் என்பது குறிப்பிடத்தக்கது.

