ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், தனது மின்சார ஆட்டோவின் பயணத் தூரம் (மைலேஜ்) குறைவாக இருந்ததாலும் பேட்டரி பிரச்சினையாலும் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது ஆட்டோவை வாகன விற்பனை நிலையம் முன்பாகவே தீயிட்டுக் கொளுத்தினார்.
மோகன் என்ற அந்த ஆட்டோ ஓட்டுநர், தனது வாகனத்தின் பேட்டரி, ‘மைலேஜ்’ பிரச்சினை குறித்துப் பலமுறை சம்பந்தப்பட்ட வாகன விற்பனை நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், பலமுறை அலைந்தும் தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த மோகன், ஜோத்பூரில் உள்ள அந்த வாகன விற்பனை நிலையத்தின் முன் தனது வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தார்.
அங்கிருந்தவர்கள் அதைக் காணொளியாக எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

