அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட 3,000 சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு

அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட 3,000 சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு

2 mins read
2f304a39-88f4-4f98-b8ee-5cff09d0d714
 பழங்காலக் கலைப்பொருள்கள் அமெரிக்காவில் கடத்திச் செல்லப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட ஏறக்குறைய 3,000 சிலைகளை மீட்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தொடுத்திருந்தார்.

அந்த மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், சிலைக் கடத்தல் தொடர்பாக தமிழகத்​தில் 38 காவல் நிலை​யங்​களில் இருந்த 41 ஆவணங்​கள், குறுந்தகடுகள் எவ்வாறு மாயமாகின என்றும் இதுதொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்​துள்​ளது என்றும் கேள்வி எழுப்பியது.

சிலைகளைக் கண்டு​பிடிக்க முடிய​வில்லை எனப் பல வழக்​கு​கள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்​பியதோடு இதுகுறித்து விசா​ரிக்க சிறப்பு அதி​காரியை நியமிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட சிலைகள், பழங்காலக் கலைப்பொருள்கள் அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்லப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த புதிய மனு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்​பாக, பஞ்​சலோக செம்​பியன் மாதே​வி, திரு​ஞானசம்​பந்​தர், கால பைர​வர், மகாவீரர், புத்​தர் சிலைகள் உள்​ளிட்​ட​வை​யும் விலைம​திப்​பற்ற சிவசக்தி ருத்​ராட்ச மாலை, பழங்​கால கலைப்பொருள்​களும் அமெரிக்​கா​வில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

அது​போல, மகாராஜா போஜா​வால் நிறு​வப்​பட்ட 11ஆம் நூற்​றாண்​டின் பளிங்குக் கல்​லாலான சரஸ்​வதி தேவி சிலை​யானது, இங்​கிலாந்து நாட்​டில் உள்ள அருங்​காட்​சி​யகத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்தச் சிலைகளையும் கலைப்பொருள்களையும் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க இந்திய உள்துறை அமைச்சு, கலாசார அமைச்சுக்கு உத்தரவிட வேண்டுமென வழக்கறிஞர் ராஜேந்திரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்