இந்தியாவில் இணைய விற்பனையை எதிர்த்து மே 20ல் மருந்துக்கடைகள் அடைப்பு

இந்தியாவில் இணைய விற்பனையை எதிர்த்து மே 20ல் மருந்துக்கடைகள் அடைப்பு

1 mins read
bf845dbd-e80c-4c10-bc12-4b07f2d51859
நோயாளிகளின் பாதுகாப்பை வலியுறுத்தியே போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள 12.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் மே 20ஆம் தேதி நாடளாவிய வேலைநிறுத்தம் செய்யத் தயாராகி வருகின்றன.

நோய் தீர்க்கும் மருந்துகள் இணையம் மூலம் விற்கப்படுவதை எதிர்த்தும் இணையவழி மருந்துக்கடைகள் அதிகமான விலைக் கழிவுகள் வழங்குவதை எதிர்த்தும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதனால், அன்றைய தினம் மருந்துக் கடைகள் மூடப்படுவதால் நாடு முழுவதும் நோயாளிகள் பாதிக்கப்படக்கூடும் எனக் கருதப்படுகிறது.

இணையம் வழியாக கட்டுப்பாடற்ற முறையில் மருந்துகள் விற்கப்படுவதால் நோயாளிகளின் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படுகிறது. அந்த நிலையை எடுத்துரைப்பதே வேலைநிறுத்தத்தின் நோக்கம் என்று அனைத்து இந்திய மருந்துக் கடைக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

“முறையான சரிபார்ப்பு இன்றி மருந்து விநியோகம் நடைபெறுகிறது. அதனால், மருத்துவர் வழங்கும் மருந்துச்சீட்டை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. அத்துடன், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தும் நிலையும் உள்ளது,” என்கிறது சங்கம்.

இணையம் மூலம் அதிக விலைத் தள்ளுபடிகள் வழங்கப்படுவது மக்களுக்கு இடையில் நடத்தப்படும் சில்லறை மருந்துக் கடைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது என்றும் அது தெரிவித்துள்ளது.

மருந்து வர்த்தகத்தை நம்பி இருக்கும் ஐந்து கோடிப் பேரின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அந்தச் சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்