விளம்பர உலகில் செல்வாக்குமிக்க பியூஷ் பாண்டே காலமானார்

விளம்பர உலகில் செல்வாக்குமிக்க பியூஷ் பாண்டே காலமானார்

படம்: பியூஷ் பாண்டே/எக்ஸ்

24 Oct 2025 - 5:01 pm

1 mins read

புதுடெல்லி: மூத்த விளம்பர நிர்வாகி பியூஷ் பாண்டே வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) காலை காலமானார். அவருக்கு வயது 70. விளம்பர உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட இவர், இந்தியாவின் மிகப் பிரபலமான சில விளம்பரங்களை உருவாக்கியதற்காகப் போற்றப்பட்டார்.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் 1955ல் பிறந்த திரு பியூஷ், இளம் வயதிலேயே விளம்பரத் துறையுடன் தமது தொடர்பைத் தொடங்கினார். தம் சகோதரர் பிரசூன் பாண்டேவுடன் இணைந்து வானொலி விளம்பரங்களுக்கு இவர் குரல்கொடுத்தார்.

ஏஷியன் பெயிண்ட்ஸ், கேட்பரி, ஃபெவிக்கோல் உட்பட இந்திய விளம்பரத் துறையில் ஒரு மைல்கல்லாக மாறிய பல விளம்பரங்களை திரு பியூஷ் தயாரித்தார்.

2004ல், கேன் லயன்ஸ் அனைத்துலக ஆக்கத்திறன் விழாவில் நடுவர் தலைவராகப் பணியாற்றிய முதல் ஆசியராக இவர் விளங்கினார். இவரது பங்களிப்புகள் பின்னர் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டன. இதன்மூலம், பத்மஸ்ரீ விருதைப் பெற்ற முதல் இந்திய விளம்பரத்துறை நிபுணர் என்ற பெருமையை இவர் பெற்றார்.

திரு பியூஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இவரது மரபுக்கு மரியாதை செலுத்தினார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமது இரங்கலைப் பதிவுசெய்து திரு பியூஷுக்கு அஞ்சலி செலுத்தினார்.

குறிப்புச் சொற்கள்