ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்தத் திட்டம்: என்ஐஏ தகவல்

ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்தத் திட்டம்: என்ஐஏ தகவல்

2 mins read
0a3bf28c-278b-403f-8ebb-5ca226c1952b
டெல்லியின் பழைமைமிக்க ஜெயின் கோயிலான லால் மந்திரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதி உமர் நபி முதலில் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. - படங்கள்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதி உமர் நபி முதலில் ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகவும் போக்​கு​வரத்து நெரிசலால் கடைசி நேரத்​தில் திட்​டத்தை மாற்றியதாக​வும் என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நேர்ந்த கார் குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மே மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

நீதிமன்றம் அதனை அண்மையில் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நிலையில், தற்கொலைப்படை பயங்கரவாதியான உமர் நபியின் நடமாட்டம் குறித்த ஆய்வறிக்கை அதில் இடம்பெற்றுள்ளது.

அதில், டெல்லியின் பழைமைமிக்க ஜெயின் கோயிலான லால் மந்திரில் தாக்குதல் நடத்த உமர் நபி முதலில் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

மத்திய டெல்லியில் நிலவிய போக்குவரத்து நெரிசல், காவலர்களின் கண்காணிப்பு காரணமாகக் கடைசி நிமிடத்தில் அத்திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் லால் மந்திர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவர், திடீரென ‘யூ-டர்ன்’ அடித்துச் செங்கோட்டையை அடைந்து குண்டுகளை வெடிக்கச் செய்தார்.

நபி, அவரது கூட்டாளியான ஷாஹீன் சயீத் ஆகியோரின் பென் டிரைவ்களில் இருந்து யூரியா நைட்ரேட்டைப் பயன்படுத்தி வெடிபொருள்கள் தயாரிக்கும் முறைகள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும், சிறுநீரிலிருந்து யூரியாவைப் பிரித்தெடுப்பதற்கான முறையும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“நபியின் அறையில் சிறுநீர் நிரம்பிய பாலித்தீன் பையைக் கண்டேன்,” எனப் பெண் ஒருவர் சாட்சியமளித்தது இக்குற்றப்பத்திரிகையில் உறுதியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்