தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுவானில் பயணி உயிரிழந்ததால் விமானம் அவசரத் தரையிறக்கம்

1 mins read
738fd2c1-ecb7-43d0-89f1-524327ac509f
உரிய சட்ட நடைமுறைகளுக்குப்பின் அவ்விமானம் மீண்டும் வாரணாசிக்குக் கிளம்பிச் சென்றது. - மாதிரிப்படம்

மும்பை: நடுவானில் பயணி ஒருவர் உயிரிழந்ததால் மும்பை - வாரணாசி இடையே இயக்கப்பட்ட இண்டிகோ விமானம் மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) நிகழ்ந்தது.

மும்பையிலிருந்து புறப்பட்ட 6E-5028 என்ற அந்த விமானத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாப்பூரைச் சேர்ந்த சுசீலா தேவி, 89, என்ற மூதாட்டி பயணம் செய்தார்.

விமானம் வானில் பறந்தபோது அவருக்கு உடல்நலமில்லாமல் போனது. அவரது உடல்நிலை மேலும் மோசமடையவே, இரவு 10 மணியளவில் அருகிலிருந்த சம்பாஜிநகர் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

தயார்நிலையிலிருந்த மருத்துவக் குழுவினர் சுசீலா தேவிக்கு சிகிச்சை அளிக்க விரைந்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது கண்டறியப்பட்டது.

உரிய சட்ட நடைமுறைகளுக்குப்பின் அவ்விமானம் மீண்டும் சம்பாஜிநகரிலிருந்து வாரணாசிக்குக் கிளம்பிச் சென்றது.

இதனை இண்டிகோ விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது. மாண்டவரின் குடும்பத்தினருடன் தொடர்பிலிருந்து, தேவையான உதவிகளை வழங்கியதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்