ஜெய்ப்பூர்: பிரதமர் மோடி ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்திற்கு வியாழக்கிழமை வருகையளித்துள்ளார்.
ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிப்பு, பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதும் மற்றும் முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பதும் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி கர்ணி மாதா கோவிலுக்கு வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் வருகை தந்துள்ளார்.
அவருடன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவும் சென்றார்.
கோயிலில் சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

