முதல்வர் விஜய் பாராட்டியதால் பாமக சவுமியாவுக்கு மகிழ்ச்சி

முதல்வர் விஜய் பாராட்டியதால் பாமக சவுமியாவுக்கு மகிழ்ச்சி

1 mins read
cdd033a7-8b79-432e-b4e7-649912bd3f61
மற்ற மாநிலங்களைப்போல மத்திய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குமுன் சமூக நீதி ஆய்வு நடத்த வேண்டும் என்று செளமியா கோரிக்கை விடுத்துள்ளார். - படம்: த இந்து
Google News Preferred Icon

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் விஜய்யை பாமக எம்எல்ஏக்கள் செளமியா, சிவகுமார், வைத்தி, கணேஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலாம்பாள் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது முதல்வர் பாராட்டியதால் செளமியா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்துப் பேசிய செளமியா, “தமிழகத்தில் சமூக நீதி குறித்து ஆய்வு நடத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, பாமகவின் 46 ஆண்டுகாலத் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

“அதற்காக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். வரும் மார்ச்சில் மத்திய அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்ததும் தமிழக அரசின் சார்பில் சமூக நீதி ஆய்வு நடத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்,’’ என்றார்.

செளமியாவைப் பார்த்ததும், சட்டமன்றத்தில் முக்கியமான பிரச்சினைகள் குறித்து சிறப்பாக, புள்ளி விவரங்களுடன் பேசுகிறீர்கள். உங்கள் பேச்சைக் கூர்ந்து கவனித்து வருகிறேன் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதனால், மகிழ்ச்சி அடைந்த செளமியா, மற்ற மாநிலங்களைப்போல மத்திய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குமுன் சமூக நீதி ஆய்வு நடத்த வேண்டும் என்று தனது கோரிக்கையை முன்வைத்தார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர் விஜய், “அதிகாரிகளின் கருத்துக்கேற்ப ஆளுநர் உரையில் அறிவித்தோம். வரும் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சமூக நீதி ஆய்வு நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்,” என்று பதிலளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
பாமகவிஜய்மக்கள்தொகை