கான்பூர்: உத்தரப் பிரதேச மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் தமது மனைவியைக் கொலை செய்ய பாம்பாட்டிகளை ஏவிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அனுஜ் பால் என்னும் அந்த ஆடவர் நான்காண்டுகளுக்கு முன்னர் அன்ஷிகா என்பவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
பாலியல் பலாத்கார தண்டனையில் இருந்து தப்பிக்க அந்தப் பெண்ணை அவர் மணந்துகொண்டார். அப்போது அவர் காவல்துறையில் பணிபுரியவில்லை.
காவல்துறையில் சேர்ந்ததும் தமது திருமணத்தை அவர் ரத்து செய்ய முயன்றார். மேலும், தமது மனைவியை பல வழிகளில் சித்திரவதை செய்யத் தொடங்கினார்.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி இரண்டு பாம்பாட்டிகளை அழைத்து வந்து மனைவி அன்ஷிகா மீது பாம்புகளை ஏவி விட ஏற்பாடு செய்தார் அனுஜ்.
பாம்பாட்டிகளும் பாம்புகளை அவிழ்த்துவிட்டனர். அதில் ஒரு பாம்பு அன்ஷிகாவைக் கடித்தது. வலியால் துடித்தபோது கதற முயன்ற அந்தப் பெண்ணின் வாயை அவர் பொத்தினார்.
பின்னர் அந்தப் பெண் மயங்கியதும் அவர் உயிரிழந்துவிட்டதாக நம்பி தமது வீட்டை விட்டு அனுஜ் புறப்பட்டார்.
ஆயினும் சிறிது நேரத்தில் நினைவு திரும்பிய அன்ஷிகா, அங்கிருந்து தப்பி தமது பெற்றோர் வீட்டுக்கு ஓடினார்.
தொடர்புடைய செய்திகள்
நடந்த சம்பவத்தை விளக்கி அளிக்கப்பட்ட புகாரை காவல்துறையினர் தொடக்கத்தில் ஏற்க மறுத்ததாக அந்தப் பெற்றோர் கூறினார்.
தற்போது புகார் ஏற்கப்பட்டு அனுஜ் மீது விசாரணை நடைபெறுகிறது.