‘நீட்’ போராட்​டத்​தில் காவல்​ துறை அத்துமீறல்; விசாரணை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி

‘நீட்’ போராட்​டத்​தில் காவல்​ துறை அத்துமீறல்; விசாரணை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி

1 mins read
48d8da0a-5191-4b74-9150-09ee09fb83da
ஓய்வு பெற்ற உச்ச நீதி​மன்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் அண்மையில் ‘நீட்’ ​வி​னாத்​தாள் கசிவுக்கு எதி​ரான மாணவர்​கள் போராட்​டம் நடத்தினர்.

போராட்​டத்​தின் ​போது காவல்​துறை​யினரின் அடக்​கு​முறை, வரம்பு மீறிய செயல்​கள், பெண் போராட்​டக்​காரர்​கள் மீதான பாலியல் துன்​புறுத்​தல், மாணவர்​கள் மீதான வழக்​கு​களை ரத்து செய்​வது உள்​ளிட்ட விவ​காரங்​கள் அடங்​கிய பல மனுக்​கள் உச்​சநீ​தி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தன.

இந்த மனுக்​களை உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய் மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகஸ்ட் 18ஆம் தேதி விசா​ரித்​தது.

அனைத்துத் தரப்பு வாதங்​களை​யும் கேட்ட பின்​னர், “நீட் போராட்​டம் தொடர்​பாக எழுந்​துள்ள அனைத்து வித​மான பிரச்​சினை​களை​யும் ஆராய ஓர் உயர்​மட்டக் குழு அமைக்​கப்​படும்,” என்று நீதிபதிகள் உத்​தரவிட்டனர்.

ஓய்வு பெற்ற உச்ச நீதி​மன்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலை​மை​யில், அரி​யானா உயர்​நீ​தி​மன்ற முன்​னாள் நீதிபதி ரவிசங்​கர் ஜா, டெல்லி உயர்​நீ​தி மன்ற முன்​னாள் நீதிபதி சைலேந்தர் கவுர், சி.பி.ஐ முன்​னாள் இயக்​குனர் ரிஷி குமார் சுக்லா, மேகாலயா மாநில முன்​னாள் டி.ஜி.பி எல்​.ஆர்​.பிஷ்னோய் ஆகியோர் கொண்ட உயர்​மட்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது.

உயர் மட்ட குழு அளிக்​கும் அறிக்​கை​யின் அடிப்​படை​யில் அடுத்தகட்ட சட்​டரீ​தி​யான நடவடிக்​கைகள்​ எடுக்​கப்​படும்​ என்​று உச்​ச நீதி​மன்​றம்​ உறுதியளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்