இந்திய ரயில் நிலைய திரைகளில் ஆபாசக் காணொளி

இந்திய ரயில் நிலைய திரைகளில் ஆபாசக் காணொளி

1 mins read
486c0b16-206d-43aa-a2df-beb8ea58c492
படம்: ஏஎஃப்பி -

இந்தியாவின் பாட்னா ரயில் நிலையத்தில் அமைந்துள்ள திரைகளில் ஆபாசக் காணொளி காட்டப்பட்டுள்ளது.

விளம்பரங்கள் செய்யப்படும் திரைகளில் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் ஆபாசக் காணொளி திரையிடப்பட்டது.

சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிவாக்கில் நடந்தது.

திரையில் ஓடிய காணொளியை அங்கிருந்த பயணிகள் தங்கள் தொலைபேசிகளில் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

சில பயணிகள் ரயில் நிலையத்திலேயே தங்களது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

திரையில் ஆபாசக் காணொளி பகிரப்பட்டதற்காக விளம்பரங்களை திரையிடும் நிறுவனத்தின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்

குறிப்புச் சொற்கள்