லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் சனிக்கிழமை (செப்டம்பர் 7), மிகப் பெரிய மலைப்பாம்பு ஒன்று மின் நிலையத்தில் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையத்தின் கம்பி வேலியில் அது சுருண்ட நிலையில் காணப்பட்டது.
விஷமற்ற வகையைச் சேர்ந்த அந்தப் பாம்பு, கிளைட் ரோட்டில் உள்ள மின் நிலையத்தின் அதிக மின்சாரம் பாயும் பகுதிக்குள் ஊர்ந்து சென்றது.
மலைப்பாம்பை மீட்கும் பணியில் மின்துறை, வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அந்த மீட்புப் பணிக்காக மின்சார விநியோகத்தைத் தடை செய்ய நேரிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சென்ற ஆண்டு (2023) லக்னோவில் அரசாங்க அலுவலகங்கள் செயல்படும் சக்தி பவன் வளாகத்திலிருந்து பாம்பு ஒன்று மீட்கப்பட்டது.
‘யுபிபிசிஎல்’ எனப்படும் உத்தரப் பிரதேச மின்சக்தி நிறுவனத்தின் கோப்புகளுக்குள் அது சுருண்டு கிடந்த நிலையில் காணப்பட்டது.