முதல் நாள் சிறையில் கதறி அழுத பிரஜ்வல் ரேவண்​ணா

1 mins read
0a187370-93a5-4c8c-983d-98326c7163c8
சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக பிரஜ்வல் ரேவண்​ணா கூறியுள்ளார். - கோப்புப் படம்: ஊடகம்

பெங்களூரு: வீட்டுப் பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் சிறையில் அடைக்கப்பட்ட முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணா, 34, முதல் நாள் சிறையில் கதறி அழுதாகத் தகவல் வெளியாகியது.

அந்த வழக்கில் அவருக்கு சாகும் வரை சிறைத் தண்​டனை விதிக்​கப்​பட்டது.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், சிறைத் துறை அதிகாரிகள் அவர் சிறையில் அடைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர்.

“பிரஜ்வல் ரேவண்​ணா பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு கைதி எண் 15528 வழங்​கப்​பட்​டுள்​ளது.

“சென்ற 2ஆம் தேதி தீர்ப்பு வழங்​கப்​பட்ட நிலை​யில், தண்​டனைக்​கான முதல் இரவை அவர் சிறை​யில் கழித்​தார். கண்​ணீர் விட்டு அழுததுடன், மிகுந்த மன உளைச்​சலுடன் காணப்​பட்​டார். அவரது உடல்​நிலை சீராக இருப்​பதை உறுதி செய்​வதற்​காக சிறை மருத்​து​வர்​கள் அன்று இரவு அவரது உடல்​நிலையைப் பரிசோ​தித்​தனர்.

“அப்போது, தனது வேதனை​களை மருத்துவர்களிடம் அவர் வெளிப்​படுத்​தி​யுள்​ளார். இந்தத் தண்​டனையை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்தை அணுகி​யுள்​ள​தாக​வும் பிரஜ்வல் ரேவண்ணா கூறி​யுள்​ளார்,” என்று சிறை அதிகாரிகள் கூறினர்.

“முன்​னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் தற்​போது அவர் உயர் பாது​காப்பு அறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ளார்.

“கைதிகளுக்கு உரிய ஆடை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அதி​காரபூர்​வ​மாக கைதி எண் 15528 ஒதுக்​கப்​பட்​டது,” என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்