தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெய்ஷாவை விமர்சித்த பிரகாஷ் ராஜ்

1 mins read
d4709c39-c05c-4023-9aaf-decb8bfedad8
35 வயதான ஜெய்ஷா இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன்.  - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) தலைவராக போட்டியின்றி ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.

“ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வாகி உள்ள ஜெய்ஷா, இந்திய கிரிக்கெட் உருவாக்கிய ஆகச் சிறந்த பந்தடிப்பாளர், பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர், களகாப்பாளர், ஆல்ரவுண்டர். அவருக்கு அனைவரும் கைத்தட்டல் அளித்து வாழ்த்துவோம்” என பிரகாஷ் ராஜ் ஜெய்ஷாவை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டார்.

35 வயதான ஜெய்ஷா இந்திய உள்துறை அமைச்சர் அமித் ‌‌ஷாவின் மகன். ஜெய் ஷா 2019ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக இருந்து வருகிறார். அவர் ஐசிசியின் தலைவராக வரும் டிசம்பர் 1ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார்.

ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன், ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்கு பிறகு ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்கும் ஐந்தாவது இந்தியர் ஜெய்ஷா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்