தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீகாரின் புகழ்பெற்ற மகாபோதி கோயிலில் இலங்கை அதிபர் திசாநாயக்க தரிசனம்

2 mins read
b5953217-a671-40bd-8718-ccab60e5122d
கோயில் வளாகத்தில் புத்தர் தொடர்புடைய பல இடங்களையும் அதிபர் திசாநாயக்க பார்வையிட்டார். - படங்கள்: இந்திய ஊடகம்

பாட்னா: இலங்கையின் அதிபராக அனுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் திங்கட்கிழமை (டிசம்பர் 16) பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் மீனவர்கள் பிரச்சினை, இலங்கைத் தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், அதிபர் திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள புத்தகயாவுக்குச் சென்றார். அங்கு, புத்தரின் புனிதத் தலங்களில் ஒன்றான மகாபோதி கோயிலில் பிரார்த்தனை செய்தார். மேலும், கோயில் வளாகத்தில் புத்தர் தொடர்புடைய பல இடங்களையும் அவர் பார்வையிட்டார். இலங்கை அதிபரின் வருகையையொட்டிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மகாபோதி கோயில் பௌத்த மதத்தின் புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்குதான் புத்தர் ஞானம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இது யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் புத்தரின் ஆசீர்வாதம் பெற அதிபர் திசாநாயக்க இங்கு வந்திருந்தார். விழுமியங்கள், பொதுவான கலாசாரப் பாரம்பரியம் ஆகியவை எப்போதும் விரிவடைந்து வரும் எங்கள் பங்காளித்துவத்தின் அடித்தளம் மற்றும் வழிகாட்டும் சக்தியாகும்.

“பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையில், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்த எங்கள் தீவு தேசம் அனுமதிக்காது என்று இலங்கை அதிபர், பிரதமர் மோடியிடம் திட்டவட்டமாக உறுதியளித்தார்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்