புதுடெல்லி: இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மன்னர் சார்லசிடம் மோடி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இரு நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுத் தொடர்பு, பல்வேறு துறைகளிலும் உள்ள ஆழமான ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது சார்லசின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியா-இங்கிலாந்து உறவுகளை வலுப்படுத்த வேண்டும். காலநிலை மாற்றம் மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்.

