பிரதமர் மோடி நியூசிலாந்துக்கு முதல் பயணம்

பிரதமர் மோடி நியூசிலாந்துக்கு முதல் பயணம்

1 mins read
4eac9305-8d2c-44f1-811f-6276c99d7c42
நாற்பது ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்து செல்வது இதுவே முதல் முறை. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சிட்னி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் நியூசிலாந்துக்குத் தமது முதல் பயணத்தை மேற்கொள்வார் என்று நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் நியூசிலாந்தும் கடந்த ஏப்ரல் மாதம் தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

அதன்படி, நியூசிலாந்திலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு இந்தியா 95 விழுக்காட்டுக்கு வரியைக் குறைக்கும்.

அதேபோல, அனைத்து இந்திய ஏற்றுமதிகளுக்கும் 100 விழுக்காட்டு வரிவிலக்கு அளிப்பதை உடன்பாடு உறுதிசெய்கிறது என்றும் நியூசிலாந்தின் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு உறுதிப்பாட்டை எளிதாக்குகிறது எனவும் ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் பேசிய இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

அதே நிகழ்ச்சியில் உரையாற்றிய நியூசிலாந்தின் வர்த்தக, முதலீட்டு அமைச்சர் டாட் மெக்ளே, தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது, நியூசிலாந்து ஏற்றுமதியாளர்களுக்கு இந்தியாவில் இதுவரை கிடைக்காத வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறினார்.

இந்நிலையில், “பிரதமர் மோடியின் வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நாற்பது ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்து வருவது இதுவே முதல் முறை,” என்று திரு லக்ஸன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஜூலை 10ஆம் தேதி மோடி ஆக்லாந்து செல்வார் என்ற தகவலை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்