பிரதமர் மோடி வீட்டில் பிறந்த கன்றுக்குட்டிக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு, ‘தீப்ஜோதி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.
புதிய செல்லத்தை அவர் தட்டிக் கொடுத்து கொஞ்சுவதையும் முத்தமிடுவதையும் காணொளி வழியாக அவர் பகிர்ந்துள்ளார்.
அவரது மடியில் கன்றுக்குட்டி படுத்துக் கொள்கிறது. தீப்ஜோதியைத் தூக்கிக்கொண்டு வீடு முழுவதும் திரு மோடி வலம் வருவதையும் படங்கள் காட்டுகின்றன.

