ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடலுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் ஆறாம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார்.
ஐந்தாம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக ராமேஸ்வரம் செல்ல இருக்கிறார். அதன்பின் பாம்பன் புதிய பாலத்தை திறந்துவைத்தபிறகு பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.